பேண்ட் வாத்திய போட்டி-2023

 பேண்ட்  வாத்திய  போட்டி-2023.....

மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேற்கத்திய பேண்ட்  வாத்திய  போட்டி-2023  (17) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்,  எஸ்.குலேந்திரகுமார் தலைமையில் இடம் பெற்ற இவ் பேண்ட்  வாத்திய போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ. கனகசூரியம், கௌரவ அதிதிகளாக இலங்கை ராணுவ 231 ஆம் படை தளபதி பிரிகேடர் டெலுப பண்டார, மட்டக்களப்பு மாவட்ட பொலீஸ் பொறுப்பு அதிகாரி உஜித் என்பி.லியானகா,  சிறப்பு அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் டி. ஆனந்தரூபன், மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். எம்.அமீர் மற்றும் மேற்கு உதவி கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இவ் மேற்கத்திய பேண்ட் வாத்திய போட்டியில் மொத்தமாக 21 பாடசாலைகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

அதில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மண்முனை வடக்கில் முதலாம் இடத்தை மட்/புனித மிக்கல் கல்லூரி பெற்றுக் கொண்டதோடு, மட்/புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இரண்டாவது இடத்தையும் மற்றும் பல போட்டிகளின் மத்தியில் மட்/மகாஜனா கல்லூரி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத் தக்கது.

இதன் போது பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் இ பாடசாலைகளின் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.பேண்ட் வாத்திய அணிநடைகள் அனைவரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.











Comments