தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம் -2023: 'சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம்'.......

 தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம் -2023: 'சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம்'.......

 மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம்-2023 'சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம்' ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

 'சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம் ' எனும் தொனிப் பொருளில் கடற்கரை சிரமதானம், வீடு தரிசித்து மற்றும் சுற்றாடல் சுத்தப்படுத்தல் போன்ற நிகழ்வுகள்  (01) காலை 8.30 மணி முதல் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 டெங்கு பரவலை தடுத்தல், பொலீத்தின் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், முறையான கழிவு முகாமைத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு  42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சுற்றாடல் சுத்தப்படுத்தல் நிகழ்வுகளும், 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரை சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டதோடு, 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் வீடு தரிசிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

 சமுர்த்தி பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வுகள்  அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் திட்டமிடல்  உத்தியோகத்தர்கள் மற்றும் 2000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள்    பங்குபற்றுதலோடு   இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.











Comments