15 வயது வீரர் சம்ஹானின் சாதனை 209 ஓட்டங்கள் மற்றும் ஹட்றிக் சாதனை மட்டக்களப்பில்.....

 15 வயது வீரர் சம்ஹானின் சாதனை 209 ஓட்டங்கள் மற்றும் ஹட்றிக் சாதனை மட்டக்களப்பில்.....

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 2023ம் ஆண்டுக்கான 15 வயதிற்குட்பட்டோருக்கான பாடசாலைகளுக்கிடையிலான Div-III போட்டியில் ஏறாவூர் அறபா கல்லூரி மாணவன் சம்ஹான் அகமட் 141 பந்தகளை எதிர் கொண்டு இரட்டை சதத்தை பெற்று சாதனை படைத்ததுடன், அப்போட்டியில் ஹட்றிக் சாதனையும் படைத்துள்ளார்.

 உண்மையில் பாராட்டப்பட வேண்டிய பாடசாலை தான் ஏறாவூர் அறபா கல்லூரி. கடந்த வருடம் இப்பாடசாலை மிகச்சிறப்பான சாதனை படைத்த பாடசாலை என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் தங்கள் வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளார்கள்.

2023ம் ஆண்டுக்கான 15 வயதிற்குட்பட்டோருக்கான மட்டக்களப்பு பாடசாலைகளுக்கிடையிலான போட்டியானது மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரிக்கும் ஏறாவூர் அறபா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்றது.

 முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த மட்டக்களப்பு மிக்கல் கல்லூரி 51 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றதுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் புனித மிக்கல் கல்லூரி சார்பாக இஸ்வேத்மன் 59 ஓட்டங்களையும், சிவஹரிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க  பந்து வீச்சில் ஏறாவூர் அறபா கல்லூரி சார்பாக சம்ஹான் ஹட்றிக் சாதனையுடன் 20 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், அஸ்பாக் அகமட் 40 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டக்களையும் கைப்பற்றி இருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெத்தாட களம் நுழைந்த ஏறாவூர் அறபா கல்லூரி ஆரம்ப துடுப்பாட்ட வீரரர்களான சம்ஹான் அகமட்  மற்றும் ஹசீம் அகமட் புனித மிக்கல் கல்லூரியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் அடித்து ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 245 ஓட்டங்களை பெற்று புதிய சாதனை படைத்தனர். முதல் விக்கெட் ஹசீம் அகமட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சம்ஹான் அகமட் ஆட்டமிழக்காமல் 186 ஓட்டங்களுடன் களம் நின்றார். இதன் பின் ஏறாவூர் அறபா கல்லூரி 04 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள சம்ஹான் அகமட்  மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 141 பந்து வீச்சில் 209 ஓட்டங்களை 37 நான்கு ஓட்டங்கள் மற்றும் 06 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் புனித மிக்கல் கல்லூரி சார்பாக சாலோன் றாகல் 15 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும், டெனிக் அன்றசன் 35 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

 இதன் அடிப்படையில் ஏறாவூர் அறபா கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றியை பதிவிட்டுக் கொண்டது. எனவே இம்மாணவர்களை பயிற்சியளித்த முகமட் பாஸீல் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Comments