மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் 1.125 மில்லியன் செலவில் கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டம் .............

 மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் 1.125 மில்லியன் செலவில் கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டம் .............

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு இணங்க விவசாய அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் கிராமங்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆடுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஜி.அருணனின் வழிகாட்டலில் (21) இடம்பெற்றது.
இதன்போது 1.125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பவாக்கரையிலுள்ள கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் பெண் தலைமை தாங்கும் குறைந்த வருமானமுடைய 15 குடும்பங்களுக்கு 50 ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
உதவிப்பிரதேச செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பிரதிநிதி, பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன், கணக்காளர், எனப் பலர் கலந்து கொண்டனர்.

Comments