நாளை (01) VMD முதல் போட்டி இரு விவேகானந்தாவிற்கும்....
நாளை ஆரம்பமாகவுள்ள Trophy of VMD பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் இரு விவேகானந்தா பாடசாலைகள் மோதவுள்ளன.
மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரிக்கும், முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கும் போட்டி ஆரம்ப போட்டியாக நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளை இணைத்து 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியாக மட்டக்களப்பு வேல் முருகன் டிஸ்றிபியூட்டஸ் நடாத்த திட்டமிட்டுள்ளது.
போட்டிகள் யாவும் திட்டமிட்டபடி நாளை (01) காலை 8.00 மணிக்கு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளன, இதற்கான சகல ஆயத்த பணிகளும் முடிவடைந்துள்ளதுடன், இது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்கள் உதைபந்தாட்டத்திற்கு ஓர் முன்னேற்றகரமான மற்றுமொரு தொடக்கமாக உள்ளதாக மட்டக்களப்பு உதைபந்தாட்ட ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment