மட்டு பெண்கள் உதைபந்தாட்டத்தை வளர்தெடுக்க அணைவரும் கைகோர்க்க வேண்டும்: KSC செயலாளர் ஜெயதாஸன்.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேசிய மட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றும் வீராங்கனைகளுக்கான இரு நாள் பயிற்சிநெறிக்கு அனுசரனையாளர்களாக செயற்பட்ட கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் செயலாளர் பா.ஜெயதாஸன் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் சிறப்பான பெறுபேறுகளை பெற்று இன்று தேசிய மட்டத்தில் உதைபந்தாட்ட போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், இவர்களுக்கான இரு நாள் பயிற்சிநெறிக்கு கோட்டைமுனை விளையாட்டு கழகம் அனுசரனையாளராக முன்னெடுப்பதற்கு கழக தலைவர் பே.சடாற்சரராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைய தாம் இங்கு வருகை தந்ததாகவும் குறிப்பிட்டு, மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் உதைபந்தாட்டத்தை வளர்த்தெடுக்க அணைவரும் ஒன்றினைந்து கைகோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் கோட்டைமுனை விளையாட்டு கழகமானது தற்போது தமது 50வது ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் உதைபந்தாட்டத்தை வளர்த்தெடுப்பதற்காக கட்டுமுறிவு, பன்சேனை, கடுக்காமுனை, அம்பிளாந்துறை, செட்டியபாளையம் மற்றும் தன்னாமுனை அகிய பிரதேசங்களில் பாடசாலை மட்டத்தில் தங்கள் திறமையை வெளிக்காட்டிய பெண்கள் உதைபந்தாட்ட அணிகளை கழக மட்டத்தில் இணைத்து மாபெரும் பெண்கள் உதைபந்தாட்ட லீக் தொடர் ஒன்றை மிகப்பிரம்மான்டமாக நடாத்த திட்டமிட்டு, மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்துடன் கலந்துரையாடி இருந்தோம். இருந்த போதும் சில சிக்கல்கள் காரணமாக அதை நாம் கைவிட வேண்டிய ஓர் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. நாம் ஒரு போதும் விளையாட்டை மேம்படுத்த பின்வாங்குவதில்லை நாம் கடைசி நேரம் வரை முயற்சி செய்தோம் ஆனால் அது கைகூடவில்லை இதற்காக நான் உங்கள் முன் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரை சிறார் கிரிக்கெட் விளையாட்டை வளர்த்தெடுப்பதில் பாரிய பங்களிப்பை செய்த நாம், பெண்கள் உதைபந்தாட்டத்தையும் வளர்த்தெடுக்க முதல் கட்ட முயற்சியாகவே இதை நாம் செய்ய முற்பட்டோம். இதற்காக பன்சேனை கிராமத்திற்கு ஒரு விஜயத்தினை மேற் கொண்டு அங்குள்ள நிலைமைகளை அவதானித்தோம். பன்சேனையில் மிகவும் ஒரு சிறந்த பெண் உதைபந்தாட்ட வீராங்கனையான வசந்தினி அவர்களை சந்தித்து கலந்துரையாடினோம், ஆனால் அவரின் வாழ்க்கை இன்று திசைமாறி சென்று விட்டது. இதற்காக தான் பாடசாலை மட்டத்தை விட்டு கழக மட்டத்தில் இப் போட்டிகளை நடத்த நாம் முயற்சித்தோம். இன்று நான் இவ்விடத்தில் அன்று சந்தித்த தன்னாமுனை பாடசாலை வீராங்கனைகளை இன்றும் இப்பயிற்சிநெறியில் பங்குபற்றுவதை என்னால் அவதானிக்க முடிகின்றது அனால் அவர்களும் பல பிரச்சனைகளின் மத்தியிலேயே இங்கு இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்வதை என்னால் அவதானினக்க முடிகின்றது.
இதற்காகத்தான் நாம் பல கிராமங்களை ஒன்றினைத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒரு பெண்கள் உதைபந்தாட்ட அணியை உருவாக்க வேண்டும் எனும் தூர நோக்கு சிந்தனையுடன் 03 வருடங்கள் எங்களது முழு அனுசரனையுடன் இவ் லீக் உதைபந்தாட்ட சற்றுப் போட்டியை நடாத்த திட்டமிட்டோம் என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதல் போட்டியானது 14ம் திகதி பொலநறுவையில் காலிறுதி போட்டியாக ஊவா மாகாணத்துடன் நடைபெற்று மிக இலகுவாக இறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்வரன் கருத்து தெரிவித்தார். இந்நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர் T.சங்கீதா அவர்களும், இரு நாட்களாக பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர் இன்சாத் அலி மற்றும் ஆசிரியர் ஜீவா போன்றோர் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment