இரண்டாவது வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் KSC.....
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் முதல் கொண்டாட்ட நிகழ்வான நடைபவணி நிகழ்வு வெற்றிகரமாக நடாத்தி முடித்து வெற்றி கண்ட கோட்டைமுனை விளையாட்டு கழகம் தற்போது இரண்டாவது வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது.
இம்மாதம் 19ம் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் கோட்டைமுனை பிரிமியர் லீக் போட்டியை மிகப்பிரம்மாண்டமாக நடாத்த திட்டமிட்டு வருகின்றது. இதற்கான முன் ஆயத்த பணிகளை கோட்டைமுனை பிரிமியர் லீக்கின் முதல் ஆரம்ப ஸ்தாபகரும், ஒருங்கினைப்பாளருமான S.ரஞ்சன் அவர்கள் ஒழுங்கமைத்து வருகின்றார். ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படுவது போன்று 06 அணிகள் மோதுகின்றது.
புதிதாக பல விடயங்கள் இம்முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டு நடைபெறவுள்ளது. இம்முறை முதல் தடவையாக கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதுடன், மட்டக்களப்பில் ஒரு பிரிமியர் லீக் போட்டியானது முதல் தடவையாக கடின பந்து போட்டியாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். அது மாத்திரமன்றி 20ம் திகதி ஆரம்பமாகும் இப்போட்டி 21ம் திகதியும் நடைபெறும் எனவே இப்போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வானது 19ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 06 மணி தொடக்கம் இரவு 09 மணி வரை கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தில் ஒரு களியாட்ட நிகழ்வாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டு நடைபெறவுள்ளது விசேட அம்சமாகும். இந்நிகழ்வில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் வெற்றிக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் 2023ம் ஆண்டுக்கான கோட்டைமுனை பிரிமியர் லீக் போட்டிகளில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர்கள், இளம் வீரர்கள் மற்றும் சிறார்கள் கலந்து கொண்டு கிரிக்கெட், உதைபந்தாட்டம் மற்றும் இரவு நேர கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக ஒருங்கினைப்பாளர் S.ரஞ்சன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் இன்னும் பல சுவாரஸ்சியமான விடயங்கள் இருப்பதாகவும் அதை இனி வரும் காலங்களில் தாம் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
எது எப்படியோ கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது பொன் விழா கொண்டாட்டம் களை கட்டி செல்கின்றது என்பது உண்மையான விடயமாகவே தென்படுகின்றது. இது போன்று இன்னும் பல சிறப்பான சம்பவங்கள் இவ்வாண்டில் 50வது வருடத்திற்காக காத்துக் கிடக்கின்றன எனவே இவ்வாண்டு கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு உண்மைக்கு கிடைத்த வெற்றி ஆண்டாகவும், மகிழ்ச்சியின் ஆண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது எனவே எம்முடன் கைகோர்த்து நிற்கும் எம் மூத்த உறுப்பினர்கள், வெளிநாடுகளில் வாழும் எம் அங்கத்தவர்கள், இளம் வீரர்கள் மற்றும் சிறார்களுக்கு நாம் நன்றிகளை தெரிவிப்பதுடன் இம் இப்பயணத்தில் கைகோர்த்து பயணிப்பதற்கு நன்றியும் கூறுகின்றோம்.
"கோட்டைமுனை நாமம் உலகெங்கும் பரவட்டும்
கோட்டைமுனை மட்டக்களப்பின் ஓர் அடையாமாக திகழட்டும்"
Comments
Post a Comment