சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட KPL தொடர்...

 சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட KPL தொடர்... 

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது வருடத்தினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது நிகழ்வான கோட்டைமுனை பிரிமியர் லீக்கின் ஆரம்ப நிகழ்வு  19ம் திகதி மாலை 6.30 மணிக்கு கோட்டைமுனை புற்தரை மைதானத்தில் மிக பிரம்மான்டமாக கோட்டைமுனை பிரிமியர் லீக்கின் இணைப்பாளர் S.ரஞ்சன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவருபரஞ்சனி முகுந்தன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோறன்ஸ் பாரதி கெனடி அவர்களும் பிரதம அதிதியாக கலந்து கொள்ள, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பின் பிரபல வர்த்தகர்களான பொன்னையா நல்லரெட்னம் அவர்களும், நல்லரெட்னம் டிலுக்சன் அவர்களும், S.ஜீலன் (பாபு) மற்றும் கணபதிப்பிள்ளை சுரேஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

இதன் போது வெற்றிக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், 06 அணிகளுக்கான புலம் பெயர் நாடுகளில் வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்களின் அறிமுகம், போட்டியிடும் அணிகளின் சின்னங்கள், அணியின் முகாமையாளர்கள், அணியின் தலைவர்கள் மற்றும் அணியினின் வீரர்கள் அறிமுகம்  செய்து வைக்கப்பட்டதுடன் இவர்களுக்கான சீருடையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவருபரஞ்சனி முகுந்தன் அவர்கள் உரையாற்றும் போது, மட்டக்களப்பில் உள்ள பிரபல விளையாட்டு கழகங்களில் ஒன்றாக கோட்டைமுனை விளையாட்டு கழகம் திகழ்வதாகவும், அன்மையில் மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட சித்திரை விளையாட்டு போட்டிகள் மற்றும் மாவட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டிகளுக்கு கோட்டைமுனை விளையாட்டு கழகம் நிதியுதவி வழங்கியதையும் குறிப்பிட்டு, அன்மையில் வெளியிடப்பட்ட மாவட்ட செயலகத்தின் மலர் வெளியீட்டில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த KPL தொடர் IPL தொடர் போன்று ஆரம்ப நிகழ்வை ஏற்பாடு செய்த கோட்டைமுனை பிரிமியர் லீக் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவிப்பதாக  கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மற்றுமொரு பிரதம அதிதியான கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோறன்ஸ் பாரதி கெனடி அவர்கள் உரையாற்றும் போது பிரம்மாண்டமானதாக இருக்கும் என சொன்னார்கள் ஆனால், இந்த நிகழ்வு மிகப்பிரம்மான்டமாக உள்ளது மிச்சிறப்பாக ஒழுங்கமைத்து செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மிகச்சிறப்பாக நடனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் தான் வசிக்கும் தாமரைக்கேணியில் இக்கழகம் 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தமக்கு பெருமை தருவதாகவும் தெரிவித்தார்.

மாலை 6.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு இரவு 9.00 மணிவரை இடம்பெற்றது, இதன் போது சிறப்பு நடன நிகழ்வை மட்டக்களப்பில் வளர்ந்து வரும் ராவணா நடன குழுவினர் வழங்கி இருந்தனர் இந்நிகழ்வானது டான் தொலைகாட்சி ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  50வது வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கோட்டைமுனை பிரிமியர் லீக் ஞாபகார்த்த நினைவு சின்னங்கள் கலந்து கொண்ட அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

கோட்டைமுனை நாமம் உலகெங்கும் பரவட்டும்
கோட்டைமுனை மட்டக்களப்பின் ஓர் அடையாமாக திகழட்டும்.


































Comments