KPL தொடரில் கிரிக்கெட் போட்டியின் சம்பியனாக KSC வொறியஸ் .....

 KPL தொடரில் கிரிக்கெட் போட்டியின் சம்பியனாக KSC வொறியஸ் .....

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட 2023 கோட்டைமுனை பிரிமியர் லீக் தொடரில் கிரிக்கெட் போட்டியில் KSC வொறியஸ் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வெற்றி கின்னத்தை தனதாக்கி கொண்டது.









06 அணிகள் மோதிக் கொண்ட இத்தொடரில் கிரிக்கெட், உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன இதில் கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டத்தை KSC வொறியஸ் அணியும், கரப்பந்தாட்டத்தை KSC ரோயல் அணியும் தனதாக்கிக் கொண்டது. ஒவ்வொரு அணியிலும் சுமார் 30 அதிகமான வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டது விசேட அம்சமாகும். அனைத்து போட்டிகளும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் மைதானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். உதைபந்தாட்டத்திற்கென உடனடியாக பிரத்தியேக மைதானம் அமைக்கப்பட்டதுடன், கரப்பந்தாட்டத்திற்கென புதிய மைதானமும் உருவாக்கி போட்டிகள் நடைபெற்றன.

இத்தொடரில் மூத்த வீரர்கள் மற்றும் தற்போது களத்தில் விளையாடும் வீரர்கள், வளர்ந்து வரும் வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும். போட்டியில் கலந்து கொண்ட அணியினருக்கு பெறுமதியான பணப்பரிசில்கள் சிறந்த வீரர்களுக்கான பணபரிசில்களும் வழங்கப்பட்டன. குறிப்பாக கடின பந்து போட்டியாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும், அதுவும் புற்தரை மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது விசேட அம்சமாகும்.

 இதன் போது இப்போட்டிகளுக்கு 03 அணிகளுக்கான நிதிப்பங்களிப்பை வழங்கி இப்போட்டியை நடாத்த உதவிய கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர்களான ஏரம்பமூர்த்தி சிறிதரன், ஏரம்பமூர்த்தி ரவீந்திரன் மற்றும் ஏரம்பமூர்த்தி முகுந்தன் ஆகியோர்  இங்கிலாந்து மற்றும் கனடாவில் இருந்த வருகை தந்திருந்தனர், அவர்களுக்கு 50வது வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கோட்டைமுனை பிரிமியர் லீக் ஞாபகார்த்த நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

வெற்றிபெற்ற அணிகள் விபரம்:

1.கிரிக்கெட்

முதலாமிடம் - KSC வொறியஸ்

இரண்டாமிடம் - KSC பைட்டஸ்

மூன்றாமிடம் - KSC லயன்ஸ்

2.உதைபந்தாட்டம்

முதலாமிடம் - KSC வொறியஸ்

இரண்டாமிடம் - KSC சலஞ்சஸ்

மூன்றாமிடம் - KSC பைட்டஸ்

3.கரப்பந்தாட்டம்

முதலாமிடம் - KSC ரோயல்

இரண்டாமிடம் - KSC கிங்ஸ் லெவன்

மூன்றாமிடம் - KSC லயன்ஸ்


























Comments