காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு....

 காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு.....

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் (31)  இடம் பெற்றன.

இதன் போது புகைத்தலினால் மது பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புனர்வு உரைகள் இடம் பெற்றதுடன் கொடியும் அணிவிக்கப்பட்டது.

இதன் போது புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புனர்வு நாடகமொன்றும் கலைஞர்களான சரண்டிப் முஸ்தபா, நஜீம்,  உனைஸ் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றதுடன் காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலின் இமாம் அல்ஹாபிழ் அஷ்ஷெய்ஹ் இல்ஹாம் அவர்களின் சிறப்புரையும் இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்ற பிரதான நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையார் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.ரஊப் மற்றும் சமுர்த்தி திட்ட முகாமையாளர் உட்பட காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.









Comments