மட்டு.புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் திருவிழா நிறைவு!
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான, புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் 105வது ஆண்டு திருவிழா, பங்குதந்தை அனிஸ்டன் மொராயஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம் பெற்ற விசேட கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெற்றது.
கடந்த ஒன்பது தினங்கள் நவ நாட்கள் சிறப்பிக்கப்பட்டு (20) மாலை புனிதரின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன், (21) இடம்பெற்ற விசேட திருவிழா கூட்டுத் திருப்பலியினை கண்டி கிலெரியன்ஸ் குருமட அதிபரும், இலங்கை மாநில கிலெரியன்ஸ் சபையின் ஆலோசகருமான, அருட்தந்தை எவரட்ஸ் டயஸ் அடிகளார் தலைமையில் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள் இணைத்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட வழிபாட்டுடன், புனிதரின் திருச்சொரூப ஆசீருடன், ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு வருடாந்த திருவிழா நிறைவுற்றதுடன்இ திருவிழா திருப்பலியில் பெருமளவான பங்கு மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
Comments
Post a Comment