"ஒல்லாந்தன் நந்திப்புல்".........
மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலை நளினகலா நாடக மன்றமும் இணைந்து நடாத்திய "ஒல்லாந்தன் நந்திப்புல்" வடமோடிக்கூத்து (04) அன்று திமிலைதீவு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினர்களாக ஆ.நவேஸ்வரன்(உதவி மாவட்ட செயலாளர்), வ.தேவநேசன் (மாகாண பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், கெளரவ விருந்தினர்களாக த.மலர்ச்செல்வன் (மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்), அமுதா வரதராஜ் (தலைவர் திமிலை நளினகலா நாடக மன்றம் மற்றும் கலைஞர்கள், அவ்வூர் மக்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment