மட்டக்களப்பில் செயல்பாட்டாளர்களை தயார் படுத்தும் மூன்று நாள் பயிற்சி பட்டறை.....

 மட்டக்களப்பில் செயல்பாட்டாளர்களை தயார் படுத்தும் மூன்று நாள் பயிற்சி பட்டறை.....

இலங்கை குடும்பத்திட்டமிடல் சுகாதார நிலையம், UNFA நிறுவனத்தின் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இளைஞர், யுவதிகளை வலுப்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றன.

மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் 8 மாத செயற்றிட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தொண்டர் செயல்பாட்டாளர்களை தயார் படுத்தும் மூன்று நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் தனியார் விடுதியில் நடைபெற்றது.

இலங்கை குடும்பத்திட்டமிடல் சுகாதார நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் இந்தியாஸ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் ஜீ.சுகுணன், வைத்தியர் டேன் சௌந்தரராஜா, வைத்தியர் கிரிசுதன், வைத்தியர் தேவகரன் மற்றும் தேவை நாடும் பெண்கள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சங்கீதா ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்து கொண்டனர்.

Comments