ஏறாவூரில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை....
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில், பலசரக்கு வர்த்தக நிலையமொன்று இனந் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, வர்த்தக நிலையத்திலிருந்த 9 இலட்சம் ரூபா பணமும் சூறையாடப்பட்டுள்ளது. வர்த்தக நிலைய உரிமையாளர் கடையை மூடிவிட்டு வீடு சென்றுள்ளார். அதிகாலை 2.30 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதாக கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பார்த்தபோது, கடை தீக்கிரையாகியிருந்ததோடு, அங்கிருந்த 9 இலட்சம் ரூபா பணமும் சூறையாடப்பட்டமை தெரியவந்தது.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
DDTV காணொளியின் உதவியுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment