பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி......

 பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி......

மட்டக்களப்பு பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி வெபர் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது D.செல்வராஜா தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்ட உதை பந்தாட்ட சங்கத்தின் அனுமதியின் கீழ் மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 25 கழக அணிகளும்,  படுவான்கரை உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 07 அணிகளுமாக 32 கழகங்களுக்கிடையில்  இப்போட்டிகள் இடம் பெறவுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.  இதன் பின் உதை பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான நிரல் படுத்தல் நிகழ்வு கழகத்தின் தலைவர் டீ.செல்வராஜா தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வானது  வெபர் மைதான உள்ளக அரங்கில் நடைபெற்றது, இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதை பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் காந்தன், பத்மநாபா சவால் கிண்ண அனுசரணையாளர் பிரவீந்த், விசேட சுற்றுப் போட்டி குழு உப தலைவர் அசோக்குமார், கழக அங்கத்தவர்கள் மற்றும் பாடுமீன் பொழுதுபோக்கு கழகப் பிரதிநிதிகள், போட்டிகளில் பங்குபெற்றும் கழகங்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சுற்றுப் போட்டிக்கான நிரல் படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது.

Comments