மட்டக்களப்பில் உலக வங்கி நிதி உதவியின் கீழ் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம்.....
மட்டக்களப்பில் உலக வங்கி நிதி உதவியின் கீழ் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம்.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் (11) கல்லடியில் இடம் பெற்றது.
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 2016ம் ஆண்டில் இருந்து ஐந்து வருடங்களாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச் செயற்திட்டத்தினுடாக முன்பள்ளி பாடசாலைகளைகள் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டதுடன் சிறார்களுக்கான சத்துணவு வழங்கள், முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களை பயிற்று வித்தல், சிறார்களுக்கான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உலக வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது ஐந்து வருட செயற்திட்டத்தின் சாதனைகள் மற்றும் அடைவு மட்டத்தினை உலக வங்கி அதிகாரிகளினால் அளிக்கை செய்யப்பட்டதுடன் குழந்தை நல வைத்திய நிபுணர் சோனியா நவரத்தினசாமியினால் குழந்தைகளின் முளை வளர்ச்சி தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
உலக வங்கியின் நிதி உதவியில் சிறார்களை பகலில் பராமரிக்கும் நிலையம் ஆரையம்பதியில் நிர்மானிக்கபட்டு மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானநந்தி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பொறியியளாலர் ரி.சுமன், முன்பள்ளி அபிவிருத்தி செயற்திட்ட பணிப்பாளர் சந்திரலால் பிரேமகுமார, பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத், உதவி பிரதேச செயலாளர்கள், தேசிய செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜிஃப்ரி, மற்றும் முன்பிள்ளைப்பருவ மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment