மட்டக்களப்பில் கழிவு உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மகர யாழ் திறந்து வைப்பு.......

 மட்டக்களப்பில் கழிவு உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மகர யாழ் திறந்து வைப்பு.......

மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'அம்கோர்' தேசிய தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில், கழிவு உலோகப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மகர யாழ் இசைக் கருவி, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விவேகானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டது.

மகர யாழானது மாணவர்களின் திறன்களை விருத்தி செய்வதன் ஊடாக 'வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்போம்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், அம்கோர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுஇ சுவாமி விவேகானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களின் பங்களிப்புடன் மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட கழிவு உலோகப் பொருட்களிலான முதலாவது சிலை இதுவாகும்.

சிலை திறப்பு விழா நிகழ்விற்கு அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கெனடி, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆரம்ப சுகாதார துறைத் தலைவர் வைத்தியர் அருளானந்தம், அம்கோர் நிறுவன ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ப.முரளிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Comments