மட்டு. சிறைச்சாலைக்கு நீதியமைச்சர் விஜயதாஸ விஜயம்......

 மட்டு. சிறைச்சாலைக்கு நீதியமைச்சர் விஜயதாஸ விஜயம்......

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரனுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், சிறைச்சாலை கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிகை அலங்கார நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments