மட்டு.சுகாதார அலுவலக பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்......

 மட்டு.சுகாதார அலுவலக பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்......

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் இன்றைய தினம் (16) மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகான நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், மட்டக்களப்பு சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகர்ப் புற பகுதிகள், கொக்குவில், ஊரணி, இருதயபுரம், வெட்டுக்காடு ஆகிய பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிகளில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மாதவன் தலைமையில் டெங்கு ஒழிப்பு முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை, கல்லடி 231வது இராணுவ பாதுகாப்பு பிரிவு, மட்டக்களப்பு Y.M.C.A ஆகியனவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இணைந்திருந்தன.

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சோதனை நடவடிக்கையின் போது, டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையுடன், அறிவித்தல் விடுக்கப்பட்டதோடு, சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

மாநகர ஆணையாளர் என்.மதிவண்ணன், பிரதி ஆணையாளர் சிவராஜா, கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ராஜன் உட்பட பலரும் டெங்கு ஒழிப்பில் பங்கெடுத்தனர்.

Comments