வெல்லாவெளியில் மாபெரும் இரத்ததான முகாம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் இணைந்து சுவிஸ் உதயம் எனும் கிழக்கு மாகாண நிறுவனத்தின் அனுசரணையில் "உதிரமீந்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் போரதீவுப்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் (02)ம் திகதி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.
இக்குருதிக்கொடை முகாமில் மட்டக்களப்பு பிராந்திய இரத்த வங்கி வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை, வெல்லவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள், பொது மக்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment