மட்டக்களப்பு பத்மநாபா சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.....

 மட்டக்களப்பு பத்மநாபா சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.....


மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில், பாடுமீன் பொழுது போக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு (14) வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 32 உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் சுற்று போட்டி, பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் தலைவர் பாலராஜா செல்வராஜா, தலைமையில் இடம்பெற்றது. இதன் முதல் போட்டியில் மட்டக்களப்பு சன் பிலவர் கழக அணியினரும், ரட்ணம் கழக அணியினரும் மோதினர்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் M.உதயகுமார், மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் V.ஈஸ்வரன், பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் செயலாளர் பத்மராஜா கோபிராஜ், பொருளாளர் ரஜினிகாந்த், உப தலைவர்களான அசோக்குமார், பரம ராசா, சுற்று போட்டி குழு தலைவர் ரோகினி புவன சிங்கம், மட்டக்களப்பு போக்குவரத்து சேவை முகாமையாளர் ஸ்ரீதரன், பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண அனுசரணையாளர்கள், பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments