காத்தான்குடியில், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பொருளாளர்களுக்கான செயலமர்வு......
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பொருளாளர்களுக்கான செயலமர்வுகள் இடம் பெற்று வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பொருளாளர்களுக்கான செயலமர்வு (26) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தில் சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான முகாமையாளர் K.பகீதரன் கலந்து கொண்டு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் கணக்குகளை பேணும் முறை மற்றும் பதிவு செய்யும் முறை செலவு செய்யும் முறை என்பது தொடர்பாக விளக்கிக் கூறியதுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின், பொருளாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கினார்.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் R.வாமதேவன் உட்பட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பொருளாளர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment