சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு......

 சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு......

சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் (31) நடை பெற்றது.

சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புகைத்தல், மது ஒழிப்பு தின நிகழ்வில் கொடி விற்பனை செய்யப்பட்டதுடன் புகைத்தல், மது ஒழிப்பு தொடர்பான கருத்துரைகளும், தொடுவானம் இளைஞர் கலைக் கழகத்தினால் விழிப்பூட்டல் நாடகமும் நடாத்தப்பட்டது.

பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K.தங்கத்துரை ஒருங்கிணைப்பில் நடை பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், நிருவாக உத்தியோகத்தர் துரைராஜ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி, மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாய அமைப்பினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை புதுமண்டபத்தடி சமுர்த்தி வங்கியிலும் வலய மட்டத்திலான புகைத்தல், மது ஒழிப்பு கொடி தின நிகழ்வுமுகாமையாளர் ஜெயசீலன் தலைமையில் இடம் பெற்றது.












Comments