மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக் கழக உதைபந்தாட்டப் போட்டி......
இக்னேசியஸ் 2023 பிரீமியர் லீக் உதைப்பந்தாட்ட இறுதி சுற்று போட்டி மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
1980 ஆம் ஆண்டு சிறிய கழகமாக ஆரம்பிக்கப்பட்டு கடந்த 43 வருட காலமாக செயற்பட்டு வரும் கழகத்தின் மூத்த உதைப்பந்தாட்டட வீரர்களை கௌரவிக்கும் வகையிலும் தற்போதய இளம் உதைப்பந்தாட்டட வீரர்களை அறிமுகப்படுத்தும் வகையில் ஐந்து கழக அணிகளை கொண்டு லீக் முறையில் இரண்டு நாட்களைக் கொண்டதாக இந்தச் சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது.
சுற்று போட்டியின் இறுதி போட்டி (07) நடைபெற்றது சேவியர், லோபஸ், லோயலா, ஒனிசி, மரியா ஆகிய ஐந்து கழக அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டியில் ஐந்தாம் இடத்தினை மரியா கழக அணியினரும், நான்காம் இடத்தினை லோபஸ் கழக அணியினரும், மூன்றாம் இடத்தினை சேவியர் கழக அணியினரும், இரண்டாம் இடத்தினை லோயலா கழக அணியினரும், முதலாம் இடத்தினை ஒனிசி கழக அணியினரும் பெற்றனர்.
வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் அதிதிகளாக புனித இன்னாசியார் ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார், அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளார், கடல் மீன்கள் விளையாட்டு கழக தலைவர் ராஜன், உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் விக்டர் என்றி ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் பரிசுகளையும் வழங்கி வைத்தனர்.
Comments
Post a Comment