சமூக பிரச்சினைகளுக்கான இடையீடுகளை அடையாளப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!!

 சமூக பிரச்சினைகளுக்கான இடையீடுகளை அடையாளப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்ட சமூக பிரச்சினைகளுக்கான இடையீடுகளை அடையாளப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஶ்ரீகாந்த் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) இடம்பெற்றது.
கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஊடகங்கள் மூலம் வெளிக்கொணரப்பட்டதனை முன்னிட்டு இப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறியும் விதமாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களிடையே கலந்துரையால் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் பிரதேசத்தில் உள்ள சிறார்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட முன்னதாகவே அதனை தடுத்து பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் கள விஜயங்களின் போது எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக முன்மொழிந்ததுடன் அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உளநல வைத்திய அதிகாரி டான் செளந்திரராஜன் மற்றும் வைத்தியர் அருள் ஜோதி, மாவட்ட இணைப்பாளர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு, நன்னடத்த உத்தியோகத்தர், உளவளத்துணை உதவியாளர், மகளிர் அபிவிருத்தி, பிரதேச சிறுவர் பாதுகாப்பு, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






Comments