மட்டு. வாழைச்சேனையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள்.....
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் (28) கோறளைப்பற்று வாழைச்சேனையில் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ஆரம்பமான விசாரனைகள் மாலை 5 மணி வரை இடம்பெற்றது.
காணமல் போனவர்களின் அலுவலகத்தின் சபை உறுப்பினர்களின் முன் வருகை தந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சாட்சியங்களை பதிவு செய்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் சார்பாக இவ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காணமல் போனோர்கள் அலுவலகத்தின் சார்பில் 3 சபை உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் இருவரும் பங்குபற்றினர்.
அலவலகத்தில் சுமார் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் அதில் முப்படையினர் மற்றும் இரட்டிப்பு பதிவு தவிர்ந்து 14988 விண்ணப்பங்கள் கிடைத்துளள்ளதாகவும், தற்போது 4000 திற்கு அண்மித்தவர்களுக்கு விசாரணை நிறைவு பெற்றள்ளதாக காணமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் சபை உறுப்பினர் T.யோகராசா தெரிவித்தார்.
Comments
Post a Comment