காத்தான்குடியில் மர நடுகை வேலை திட்டம் ஆரம்பித்து வைப்பு.....

 காத்தான்குடியில் மர நடுகை வேலை திட்டம் ஆரம்பித்து வைப்பு.....

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடியில் மர நடுகை வேலை திட்டம் (30) முன்னெடுக்கப்பட்டது.

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம்  மே 30 முதல் ஜூன் 5-ம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் மர நடுகை வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ் .சில்மியா உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்த மர நடுகை வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments