சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயலமர்வு மட்டக்களப்பில்.....
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தல் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடாத்தப்படுகின்றது.
கரிதாஸ் எகெட் நிறுவனம், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள பல் சமய இன, ஐக்கிய செயற்றிட்டத்தின், 'மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு' எனும் செயற்றிட்டத்தில், மாவட்ட சர்வ மத குழுக்களின் பங்களிப்புடன் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
அதன் ஒரு செயற்பாடாக மட்டக்களப்பு பிரதேச சர்வ சமயக் குழு, கிராம மட்ட சமாதான விழிப்பு குழு, பல்சமய இளைஞர் குழு, அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன், தற்போதைய பொருளாதார, அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் புதிய அரசியல் கலாசார மாற்றம், இனங்களுக்கிடையில் தீர்க்கப்படாத முரண்பாடுகள் போன்றவை தொடர்பில், சமூகமட்ட கட்டமைப்பை உருவாக்கும் நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
கபோட் நிறுவன அனுசரணையில் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் மைகலின் ஒழுங்கமைப்பில், கரிதாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார் தலைமையில் இச் செயலமர்வு இடம்பெறுகிறது.
இரண்டு நாள் நடைபெறவுள்ள செயல் அமர்வில் வளவாளர்களாக பெனடிக் ஜெபமாலை, பெனிக்னஸ் பேரின்ப நாயகன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
Comments
Post a Comment