மட்டு. செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலாசார விளையாட்டு விழா......

 மட்டு. செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலாசார விளையாட்டு விழா......

மட்டக்களப்பு செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலை கலாசார விளையாட்டுவிழா கழகத்தின் தலைவர் வேணு கோபாலராஜ் தலைமையில் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மரதன் ஓட்டம், கண்கட்டி முட்டி உடைத்தல், தலையணை சமர், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், போன்ற கலாசார விளையாட்டுகளும் நடைபெற்றன.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம், ஓய்வு நிலை இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் பொன்.செல்வநாயகம், முன்னாள் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். மனோகரன், பொறியியலாளர் எம்.பார்த்தீபசுதன், பிரதேச சபை செயலாளார் எஸ்.அறிவழகன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், கல்வி நிருவாக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments