காத்தான்குடியில் பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது...

காத்தான்குடியில் பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது...

மட்டக்களப்பு காத்தான்குடியில் தமிழ் சிங்கள புதுவருடம் மற்றும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, சமுர்த்தி வங்கிகளின் ஏற்பாட்டில் பாரம்பரிய விளையாட்டு விழா  ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், பிரதம விருந்தினராக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கலந்து கொண்டார்.

சிறுவர்களுக்கான முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், பலூன் ஊதி உடைத்தல், சாக்கோட்டம், மா ஊதி மிட்டாய் எடுத்தல், தேசிக்காய் ஓட்டம் உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட அலுவலக கணக்காளர் எம்.எஸ்.பசீர், பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Comments