காத்தான்குடியில் சமுர்த்தி சிறுவர் 'கெக்குளு' கலாச்சார போட்டி....
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலயத்தின் ஏற்பாட்டில் 2023ம் ஆண்டுக்கான சமுர்த்தி சிறுவர் 'கெக்குளு' கலாச்சார போட்டிகள்இ இன்று காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதரின் வழிகாட்டலில், புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 3 பிரிவுகளாக பேச்சு, கட்டுரை, நாட்டார் பாடல், நாடகம், அறிவிப்பு, சித்திரம் போன்ற போட்டிகள் இடம்பெற்றன.
முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் பிரதேச மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.
Comments
Post a Comment