மட்டு.கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் வரலாற்றுப் பதிவுகளின் கண்காட்சி.....

 மட்டு.கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் வரலாற்றுப் பதிவுகளின் கண்காட்சி.....

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான பிரிவு நடாத்தும் 'வரலாறு வாழ்வோடு இணைந்ததாக' எனும் தொனிப் பொருளில் மாபெரும் கண்காட்சி மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளருமான செல்வி அகிலா கணகசூரியம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் வரலாற்றுப் பதிவுகள் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சி நிகழ்வில், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








Comments