மட்டு, இன்னாசியார் ஆலயத்தில் வணக்கமாதா இறுதிநாள் திருப்பலி....
மட்டக்களப்பு இன்னாசியார் ஆலயத்தில் வணக்க மாதத்தின் இறுதி தினத்தை நினைவு கூரும் விதமாக புனித மரி அன்னைக்கான திருவிழா திருப்பலி அருட்தந்தை அனிஸ்டன் அடிகளாரின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மரி அன்னைக்கு திருவிழா திருப்பலியும் அதனை தொடர்ந்து அன்னையின் திருச்சுருப பவனியும் இடம்பெற்றது.
இத்திருப்பலியில் பங்குதந்தை அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரும், அருட்தந்தை ரொஷான் அடிகளாரும், அருட்தந்தை யோசப்மேரி அடிகளாரும் அருட்சகோதரர் கிங்ஸ்லி அமலநாதன் அவர்களும் இணைந்து கொண்டு திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இத்திருப்பலியில் மறைக்கல்வி மாணவர்கள் மரி அன்னை போன்று ஆடை அணிந்து திருப்பலியை சிறப்பித்ததுடன் அன்னையின் திருச்சுருவம் ஆலய வளாகத்தில் எடுத்து வரப்பட்டு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment