மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி சாரணர் விருதை வென்றனர்.....
ஜனாதிபதி சாரணர் விருதினை பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் சூட்டி கௌரவிக்கும் நிகழ்வு (24) இடம் பெற்றது
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில், சாரண மாணவர்களாக செயற்பட்டு மாணவர்களில், ஜனாதிபதி விருதினை பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி சின்னம் சூட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் பாஸ்கரன் தலைமையில் கல்லூரியில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், தலைமையக சாரணர் சங்க உதவி ஆணையாளர் சசிகுமார், மாவட்ட உதவி சாரண ஆணையாளர்கள் சாரண ஆசிரியர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள் சாரணர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment