சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கான மீளாய்வு கூட்டம்: பணிப்பாளர் தலைமையில்...
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கான மீளாய்வுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் (26) ஆகிய இன்று மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இம் மீளாய்வு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இக் கூட்டத்தில் கொடுப்பணவுகள் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதுடன், மொபைல் அப் மூலம் கொடுப்பணவுகளை பயனாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இக் கூட்டத்தில் மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கு பொறுப்பான நிர்மலாதேவி கிரிதராஜ் மற்றும் மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கான கணக்காய்வு முகாமையாளர்களான E.முரளிதரன் மற்றும் S.தயாகரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment