காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் டெங்கு கள விஜயம்!!

 காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் டெங்கு கள விஜயம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயின் தீவிரத்தன்மை அதிகமாக காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் தொகை செறிவாகக் காணப்படும் காத்தான்குடி பிரதேசத்தில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து டெங்கு கள விஜயமொன்றினை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்ததுடன் அது தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.

இவ் டெங்கு கள விஜயமானது புதிய காத்தான்குடி அன்வர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நூறாணியா பள்ளி வாயல் முன்பாகவுள்ள 316 வீடுகளுக்கு சென்று சூழல் தொடர்பான கண்காணிப்பை மேற்கொண்டதுடன் புதிய காத்தான்குடி ஜும்ஆப் பள்ளி வாயல் முன்பாகவுள்ள 320 வீடுகளுக்கு சென்று கண்காணிப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த டெங்கு கள விஜயம் பிரதேச செயலக கள உத்தியோகத்தர்களால் தொடர்ந்தும் 5 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments