காத்தான்குடியில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு .....
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பிலும் சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்ற அனர்த்தங்களுக்கான பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ பங்குதாரர்களுக்கு அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான முகாமைத்துவ செயலமர்வு (22) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அண்மைக் காலமாக ஏற்படும் நில அதிர்வு, சுனாமி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இவற்றின் போது எவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் போன்ற முன்னாயத்தங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மற்றும் புவியியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கே.கிருபைராஜா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment