மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகம் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம்.....

 மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகம் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம்.....

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகம் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக (31) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
“எமக்கு உணவு தேவை புகையிலை தேவையில்லை” என்ற தொனிப்பொருளின்கீழ் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இம்முறை அனுஸ்டிக்கப்படுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்கீழ் செயற்பட்டு வரும் தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின் போதே மாவட்ட செயலக வளாகம் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு காந்திப்பூங்காவிற்கு முன்பாக ஆரம்பமான மேற்படி விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், விமானப்படை, பொலிசார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மண்முனை வடக்கு, ஏறாவூர் நகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டமாக மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல், துண்டுப்பிரசுரம் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Comments