சென்னை அணிக்கு மதீஷா பதிரானா கிடைத்தது இப்படி தான்.. ரகசியத்தை போட்டுடைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி !!

 சென்னை அணிக்கு மதீஷா பதிரானா கிடைத்தது இப்படி தான்.. ரகசியத்தை போட்டுடைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி !!

மதீஷா பத்திரானா சென்னை அணியில் தேர்வானது எப்படி என்ற ரகசியத்தை சென்னை அணியின் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டியாக அளித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் லஷீத் மலிங்காவை போல் பந்து வீசும் சிறுவன் மதீஷா பத்திரானா, 2022 IPL தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ஆடம் மில்னேவிர்க்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக விளையாடினார் மதீஷா பத்திரானா. 2022 IPL தொடரில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்த இளம் வேகம் பந்துவீச்சாளர் மதீஷா பத்திரானா இரண்டு விக்கெட்களை மட்டுமே வீழ்த்திருந்தார் .

ஆனால் இவருடைய திறமையை சர்வ சாதாரணமாக எடை போடாமல் 2023 IPL தொடரில் அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்த சென்னை அணிக்கு இவர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இவர் இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்களை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

2021 ஆம் ஆண்டு தான் சென்னை அணி இவரை அணிக்கு கொண்டு வந்தது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சென்னை அணியின் நிர்வாகி ஒருவர், 2019 ஆம் ஆண்டு சென்னை அணியின் நெட் பவுலராக மதீஷா பத்திரானா தேர்ந்தெடுத்தது என செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த நிர்வாகி பேசுகையில், 'பத்திரனாவின் தனித்துவமான பந்து வீச்சை அவருடைய பள்ளி பருவத்திலேயே சென்னை அணிக்கு வீடியோவாக கிடைத்தது, இதனால் அவரை சென்னை அணி நெட் பவுலராக பயன்படுத்துவதற்கு முடிவு செய்து அவரை சென்னை அணிக்காக தேர்வுக்குழு தேர்வு செய்தது, அந்த சமயத்தில் அவரை சென்னை அணியில் எடுத்தது குறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் எந்த ஒரு ஒப்புதலும் வாங்கவில்லை' என சென்னை அணியின் நிர்வாகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது



Comments