மட்டு.நரிப்புல்தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.....
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு ஆயித்தியமலை நரிப்புல்தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் வேலுப்பிள்ளை மாதவன் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான நிதிப்பங்களிப்பினை அவுஸ்ரேலியா சிட்னி நகரில் வசிக்கும் புலம்பெயர் தமிழரொருவர் வழங்கியிருந்தார்.
நரிப்புல் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 92 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கப்பட்டன.
Comments
Post a Comment