காத்தான்குடியில் பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி.......
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி (29) பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதர் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜாஹிதா ஜலால்தீன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment