பாக்குநீரிணையை நீந்திக் கடந்த மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன் சாதனை...
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான தேவேந்திரன் மதுஸிகன் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்று (28) அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த மதுஸிகன், பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
தலை மன்னாரை வந்தடைந்த மதுஸிகனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க பிரதிநிதிகள், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பலரும் வரவேற்றனர்.
Comments
Post a Comment