வாழைச்சேனையில் சகவாழ்வு சங்கங்களை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம்......

 வாழைச்சேனையில் சகவாழ்வு சங்கங்களை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம்......

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் சகவாழ்வு சங்கங்களை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்று வருகின்றது.
அதற்கிணங்க பிறைந்துறைச்சேனை/A, பிறைந்துறைச்சேனை தெற்கு 206/C, தியாவட்டவான் 210/B, தியாவட்டவான் தெற்கு 210/C, வாழைச்சேனை 05(முஸ்லிம்-வடக்கு) 206/Bப ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் சகவாழ்வு சங்கங்களை பதிவு செய்யும் வேலைத்திட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் (10) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் (தேசிய ஒருமைப்பாடு) எம்.நிஸாம், கிராம உத்தியோகத்தர்களான ஜௌபர், சஜிமி, எம்.எம்.அன்வர் சாதாத், பி.ஜெஸ்மிலா பானு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான இர்பான், றசீதா, எஸ்.எச். அறபாத், என்.எச்.முஹம்மது, சாதாத் , சமுர்த்தி உத்தியோகத்தர்களான சாதிகீன், சி. எம்.எஸ்.இஸ்மாயில் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






Comments