மட்டக்களப்பு மக்கள் ஒன்றிணைந்து தொடர் நடைபயணம் ஒரு வருடம் கடந்து ....

 மட்டக்களப்பு மக்கள் ஒன்றிணைந்து தொடர் நடைபயணம் ஒரு வருடம் கடந்து ....

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து 'அமைதிக்காகவும் நீதிக்காகவும் நடக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் முன்னெடுத்துள்ள தொடர் நடைப்பயணம் இன்று 366வது நாளாக 'இன்னும் ஏன் நடக்கின்றோம் நியாயத்திற்காக' என்ற கருப்பொருளில் மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட நிம்மதியான வாழ்வே தேவை, இன்றைய பொருளாதார நெருக்கடியில் நாட்டை மீட்டெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி நடைப்பயணம் மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகளில் 43 வீதம் மந்த போசனையால் வாடுகின்றனர், 10ல் நான்கு பிள்ளைகள் போஷாக்கின்மையால் பலி, போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்கியவாறு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டன .

Comments