மட்டு. காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் வகுப்பறைகள் திறந்து வைப்பு....
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் 07 இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கட்ட இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் ஆதம் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம்.ஹக்கீம், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் உட்பட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment