ஏறாவூரில் போதைக்கு எதிரான பிரச்சாரம்!!
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஏறாவூர் நகர பிரதேச செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிசார் ஆகியோர் இணைந்து (03) திகதி போதைக்கு எதிரான சுவரொட்டி பிரச்சாரமும், துண்டு பிரசுர விநியோக நிகழ்வும் ஏறாவூர் பொலிஸ் நிலைய சந்தியில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் உட்பட மாவட்ட, பிரதேச செயலக, இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமளி ஆதரவு மையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1926 பொறிக்கப்பட்டு, போதைக்கு எதிரான வாசகங்கள் உள்ளடங்கிய ஸ்டிக்கர்கள் பிரதேச பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன், வீதிகளில் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
Comments
Post a Comment