காத்தான்குடியில் விசேட தேவையுடையவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது......
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கருத்தரங்கு (16) நடைபெற்றது.
கருத்தரங்கின் போது தனியார் துறையில் ஆர்வமுள்ளவர்கள் சுயதொழிலில் ஆர்வமுள்ளவர்கள் எனப்பிரித்து கருத்தரங்கு இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன், மனிதவள உத்தியோகத்தர்களான சுரேஸ்குமார் செல்வமலர் சிறு கைத்தொழில் உத்தியோகத்தர் ஏ.எல்.எஸ்.ஹைரியா, மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முகம்மட் இர்ஃபான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment