வாழைச்சேனையில் நோன்புப் பெருநாள் விளையாட்டு நிகழ்வு!!

 வாழைச்சேனையில் நோன்புப் பெருநாள் விளையாட்டு நிகழ்வு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் கிராமிய கலாசார விளையாட்டு விழா அண்மையில் (29) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.பஷீர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.எச் முசம்மில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகளான தேங்காய் துருவல், பணிஸ் சாப்பிடுதல், யானைக்கால், கயிறு இழுத்தல், இசைக்கதிரை, மற்றும் சைகை பாட்டு, கிராமிய அழகி, வெளியில் பந்து வீசுதல், காத்தாடி பின்னுதல் போன்ற சுவாரசியமான கிராமிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதன்போது பிரதி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், பௌத்த, இந்து, இஸ்லாமிய சமய தலைவர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், வங்கி கட்டுப்பாட்டுச்சபை தலைவர் ஏ.பி.ஏ.காதர் ஆகியோரும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.



Comments