செந்தில் – சார்ள்ஸ் – லக்ஷ்மன் ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்!

 செந்தில் – சார்ள்ஸ் – லக்ஷ்மன் ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவியேற்றுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (17) முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதன்படி, வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும்,வடமாகாண ஆளுநராக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் 2019 – 2021 வரையான காலப்பகுதியிலும் வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தார்.





Comments