மட்டு. காத்தான்குடியில் சமூகப் பாதுகாப்புச் சபையின் கௌரவிப்பு நிகழ்வு.....

காத்தான்குடியில் சமூகப் பாதுகாப்புச் சபையின் கௌரவிப்பு நிகழ்வு.....

மட்டக்களப்பு காத்தான்குடியில் சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக அங்கத்தவர்களை சேர்த்து, பிரதேச மற்றும் தேசிய ரீதியான இலக்கினை அடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு  காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் இணைப்பதிகாரிகளான  Y.M.இனிகோ மற்றும் A.M.ஆமீன்  கலந்து கொண்டார்.

காத்தான்குடியில் சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக அங்கத்தவர்களை சேர்த்து, பிரதேச மற்றும் தேசிய ரீதியான இலக்கினை அடைந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மர்சூக்கா ரபீக், சாஹிரா யாஸ்மின் மற்றும் இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஏ.எல்.அப்துல் அஸீஸ் ஆகியோர் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜாயிதா ஜலால்தீன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்..ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







Comments